Thursday, 14 October 2010

நண்பர் தங்கத்திடம் இருந்து சில சுவையானத் தகவல்கள்...

மனிதர்களாகிய நாம் 60
வயதை கடக்கும் பொழுது,
நமது ருசி அறியும் நாக்கின்
சுவை மொட்டுகளின் 40
சதவிகிதப்
பகுதி அழிந்து போய்விடும்.
*
1844 ஆம் ஆண்டு முதன் முறையாக
தந்தி மூலம்
செய்தி அனுப்பப்பட்டது.
*
குண்டூசி எகிப்து நாட்டவர்களால்
கண்டுபிடிக்கப்பட்டது .
*
சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில்
இடம் பெற்ற முதல் பெண்
நீதிபதி பாத்திமா பீவி .
*
மூளையில் வலது பக்கம் அதிக
சக்தியை பெற்றிருப்பதால் சில
பேருக்கு மட்டும்
இடது கைப்பழக்கம் இயற்கையாக
ஏற்படுகிறது .
*
வாகனங்களில் பதிவு எண்
முறையை முதன் முறையாக
அறிமுகப்படுத்திய
நாடு பிரான்ஸ் .
*
நெப்போலியன் குதிரைச்
சவாரி செய்தவாறே தூங்குவதில்
வல்லவர் . மேலும், மாவீரன்
என்று புகழ்பெற்ற அவனுக்குப்
பூனையைக் கண்டால் ஒரே பயம் .
*
பெங்களூர் நகர்
கெம்பே கௌடாவினால் 1537 -ம்
ஆண்டில் உருவாக்கப்பட்டது .
அங்கே தான் 1905 ல் முதல்
மின்சார பல்பு எரிந்தது.
*
டால்ஸ்டாய் 67 வயதில்
மிதிவண்டி ஓட்டக் கற்றுக்
கொண்டார் .
*
டாக்டர் ஆம்ரூஸ்
பாரே என்பவர்தான்
அறுவை சிகிச்சையில் தையல்
முறையைக் கண்டுபிடித்தவர்.
*
குழந்தையின் கையில் ரேகைகள் 3-
வது மாதத்திலிருந்துதான்
உருவாகின்றன .
*
மனிதன் உடம்பில் உள்ள
நரம்புகளை ஒட்டு மொத்தமாக
ஒரே நீளத்தில் நீட்டினால்
அது 45 மைல்
நீளத்திற்கு இருக்கும்.
*
குளிர்ந்த காற்றும் வெப்பக்
காற்றும் சந்திப்பதால்
புயல்கள் உருவாகின்றன .
*
இடி மின்னல் நாடு என்று பூடான்
நாட்டை குறிப்பிடுகின்றனர் .
*
"ஜெய்ஹிந்த்" என்ற
வார்த்தையை முதன் முதலில்
பயன்படுத்தியவர்
தியாகி செண்பகராமன் .
*
உலகில் தலைமுடி ஏற்றுமதியில்
முன்னனியில் உள்ள
நாடு சீனாதான் ..
*
மிகவும் லேசான உலோகம்
லித்தியம் எனும் உலோகம்தான்.
*
1804 ஆம் ஆண்டில்தான் காகிதம்
தயாரிக்கும் இயந்திரம்
கண்டுபிடிக்கப்பட்டது .
*
மிக அதிக நீள சாலைகள் உள்ள
நாடு பெல்ஜியம் .
*
உலகின் மிகச்சிறிய
குடியரசு நாடு நெளரு குடியரசு.

No comments:

Post a Comment