Thursday, 30 September 2010

தோல் வங்கி...!?

# நமது உடலிலேயே மிகப்பெரிய
உறுப்பு தோல் தான்.

# மனிதத் தோலின்
ஒவொரு அங்குலத்திலும் 20
அடி நீள அளவில் ரத்த குழாய்கள்
இருக்கும் .

# மனித தோலில் உள்ள
நரம்புகளை ஒன்றாக சேர்த்தால்
அவை சுமார் 45 மைல் தூரம்
வரை இருக்குமாம். அதாவது 72
கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக
இருக்குமாம் .

# நமது உடலில் உள்ள தோல்
மொத்தம் 2 மீட்டர்
அளவு கொண்டதாம்.

# மனிதனுடைய தோல் செல்கள்
ஒவொரு மாதமும் பழைய
செல்களை இழந்து புதிதாக
உருவாகிறது . ஒருமணி நேரத்தில்
மனிதன் தினமும் 6,00,000 நுண்
தோல் பொருட்களை இழக்கிறான்.
இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ்
நாளில் 102 பவுண்ட்
எடையை இழந்து விடுகிறான்.

#தோல் வங்கி :-
பணம் சேமிக்க மட்டும்தான்
வங்கி என்று நினைக்கிறீர்களா?.
இல்லை, அறிவியல் யுகத்தில் மனித
உறுப்புகளும்
வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் ரத்தவங்கி அனேக
இடங்களில் இயங்குகிறது .
ஆனால் தோல்
வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?...
இது விலங்குகளின் தோல்
விற்பனை செ‌ய்யு‌ம் சந்தை அல்ல.
மனித தோல் சேமிப்பு வங்கி.
தோல் உடலை பாதுகாக்கும் கவசம்
போன்றது . அதன் முக்கியத்துவம்
உணர்ந்துதான் தோல்
சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய வங்கி இந்தியாவில்
மும்பையில்
மட்டுமே இயங்குகிறது .
நெருப்புக் காயம்
பட்டவர்களும் , விபரீத
விபத்துகளால் தோல் சேதம்
அடைபவர்களும்
இங்கிருந்து தோலை பெற்று பயன்
அடையலாம் .
உறு‌ப்பு தான‌ம்
த‌ற்போது இ‌ந்‌தியா‌வி‌ல்
அ‌திக ‌வி‌ழி‌ப்புண‌ர்வை அடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல்,
இனி வரும் காலங்களில் மனித
உறுப்பு சேமிப்பு வங்கிகளும்
பெருகி மனித சமுதாயத்தை கா‌க்க
வ‌ழி வ‌கு‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பலா‌ம்

No comments:

Post a Comment